
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி[தன்னாட்சி],
mahabarathi 1974@gmail.com
99521 40275
“கேட்டிலுந் துணிந்து நில்” மகாகவி
பாரதியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.அந்த மகா கவியை வெளுப்பதற்காகக்
காலம் அவனைத் துவைத்தெடுத்து கிழிக்கமுயன்று இறுதியில் தோற்றுப்போனது.சிதையா
நெஞ்சுகொள் எனும் சூத்திரமே பாரதியின் வாழக்கை நமக்கு வழங்கும் பாடம்.
பதினாறு
வயதிற்குள் பாரதியைப் போல் வாழ்க்கைப்புயலை எதிர்கொண்டவர் வேறுயாரும் இருக்க
முடியாது.வறுமை எனும் உளியால் செதுக்கப்பட்ட கலைச்சிற்பம் மகாகவி பாரதியார்.
வறுமையும் வெறுமையும் விடாது துரத்தியபோதும்
அஞ்சாமல் அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு
எழுந்த மாகவிஞர் மகாகவி பாரதியார்..நெருப்பாற்றில் நீந்திக்கொண்டும் அவரால்
அழகியல் கவிதைகளைத் தரமுடிந்தது.
“நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியிலெறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி-எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”
பாரதியின் வாழ்நாட்கள் வறுமையில்
கழிந்தன.ஆனாலும் பாரதியிடம் என்றும் சோர்வில்லை,மனக்கலக்கமில்லை.மாநிலம் பயனுற
மாகாளியிடம் வல்லமை கேட்கிறான் பாரதி.
தாமிரபரணிபாயும் சீவலப்பேரி, மகாகவி பாரதியின்
தந்தை, சின்னச்சாமிஐயர் பிறந்தஊர்.தந்தை கடுவாய்ச் சுப்பைய்யர் காலமானபின் தாய்
பாகீரதியம்மையாருடன் பாரதியின் தந்தை எட்டயபுரம் செல்ல நேரிடுகிறது.
தாயின் இறப்பு
.................................
எட்டயபுரத்தில் சின்னசாமிஐயர் பள்ளிப்படிப்பை
முடித்து எட்டயபுரஜமீனில் பணிபுரிகிறார்.அதே ஊரில் வசித்த லட்சுமிஅம்மையாரை
மணக்கிறார்.1882 டிசம்பர் 11 இல் மகாகவி பாரதி பிறக்கிறார்.சுப்ரமணியன் என்று
பெயரிடுகிறார்கள்.பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887இல் பாரதியின் தாய் லட்சுமிஅம்மையார்
காலமாகிறார்.
பாரதி
தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.
“என்னை
ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்
ஏங்கவிட்டு விண் எய்திய தாய் “ (சுயசரிதை: 20)
ஏங்கவிட்டு விண் எய்திய தாய் “ (சுயசரிதை: 20)
1889 ஆம் ஆண்டில் பாரதியின் தந்தை சின்னசாமிஐயர்
வள்ளியம்மாள் எனும் மங்கையை மறுமணம் செய்கிறார்.
ஓடிவிளையாடாத பாரதிக் குழந்தை
...............................................................................
பாட்டி பாகீரதியின் அன்பும் தாய்வழிப்பாட்டனார்
ராமசாமிஐயரின் அன்பும் பாரதியைச் செழுமைப்படுத்தின.பாரதிக்கு மற்ற குழந்தைகளுடன்
விளையாடுவதற்கு ஆசைஇருந்தாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று
கண்டிப்பாகச் சொல்லி வளர்த்ததைப்
வருத்ததோடு பதிவு செய்துள்ளார்.ஓடிவிளையாடு பாப்பா என்று குழந்தைகளுக்கு
அறிவுரை சொன்ன பாரதி ஓடியாடவில்லை,பாரதியின் தந்தை சின்னசாமிஐயர் பாரதியை
ஓடியாடவிடவில்லை
ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்
ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் ஈண்டு பன்மரத்து ஏறிஇ றங்கியும் என்னொடுஒத்த சிறியர் இருப்பரால்; வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சியான் வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன், தூண்டு நூற் கணத்தோடு தனியனாய்த் தோழமை பிறிதின்றி வருந்தினேன் |
(சுயசரிதை: 4)
தோழமை ஏதுமின்றி வருந்தியே அவர்தம் குழந்தை
நாட்களைக் கழித்துள்ளார்.அதனால்தான் கூடிவிளையாடு பாப்பா என்று பாடினார்.
பெருஞ்செல்வம் இழந்த தந்தை
.......................................................................
பாரதியின் தந்தை எட்டயபுரத்தில் தொடங்கிய
காட்டன் ஜின் பாக்டரி செயல்படமுடியாத நிலையில் வறுமை ஆட்டிப் படைத்தது.கையில்
வைத்திருந்த பணத்தை ஆங்கிலஅரசின் சதியால் தன் தந்தை இழந்ததைப் பாரதி துயரத்துடன்
பதிவு செய்கிறார்.
“ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும்
ஊணர் செய்த சதியிலிழந்தனன்”
ஏழுவயதில் பாரதி பட்டம்
.........................................................
யாருக்கும் அடங்காத காட்டாறு பாட்டாறாய்
உருவெடுத்தது.கலைமகள் கவிமகளாய் பெருக்கெடுத்தாள்.ஏழுவயதில் கவிபுனையகூடிய ஆற்றல்பெற்றிருந்த
சுப்பையாவுக்கு எட்டயபுர அரண்மனையில் 1893 ஆம் ஆண்டு சிவயோகியார் தலைமையில் புலவர்
குழு ‘’பாரதி’’ என்ற பட்டத்தை வழங்கியது.
அன்று முதல் சுப்பையா சுப்பிரமணிய
பாரதியானார்.இத்தனைத் திறன்களைத் தன்னகத்தே பெற்ற அருமை மகன் சுப்பிரமணிய பாரதியை
இன்னும் உயர்த்திப் பார்க்க சின்னச்சாமி அய்யர் ஆசைப்பட்டார். திருநெல்வேலி
ஆங்கிலவெர்னாகுலர் பள்ளி அவர் நினைவுக்கு வந்தது.
திருநெல்வேலி டவுண் தெற்குப்புதுத்தெருவில் 1859
ஆம் ஆண்டு ஆங்கிலமும் தமிழும் ஒன்றாகக் கற்க சைவப்பெருமக்களால் தொடங்கப்பட்ட ஆங்கிலவெர்னாகுலர்
பள்ளி, பின்நாளில், 1861 ஆம் ஆண்டு தற்போதுள்ள திருநெல்வேலி சந்திப்புக்கு
அருகிலுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டு இந்துக் கலா சாலை என்று பெயர் மாற்றம் பெற்றது.
மகாகவி பயின்ற பள்ளி
......................................................
எட்டயபுரத்தில் மகன் சுப்பையா இருந்தால் வறுமை
மிகவும் பாதித்துவிடும் என்பதால் பாரதியைத் திருநெல்வேலியில் உள்ள
ஆங்கிலவெர்னாகுலர் பள்ளி என்ற பெயரில் அன்றும், மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்
கல்லூரி மேல்நிலைப் பள்ளி என்று இன்று அழைக்கப்படும் ம.தி.தா இந்துக் கல்லூரிப்
மேல்நிலைப்பள்ளியில் சின்னசாமி கொண்டு சேர்க்கிறார்.
இயற்கை விரும்பியாகிக் கவிதைகள் படைக்கும்
மகாகவி பாரதியால் பள்ளிப்படிப்பை மனமொன்றிக் கற்கமுடியவில்லை.மூன்றுகாதல் என்ற
தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் எழுதிய கவிதையின் தொடக்கத்தில் பள்ளிப்படிப்பு
நாட்டமில்லாமல் போனதாக பாரதி குறிக்கிறார். ‘’பள்ளிப் படிப்பினிலே-மதிபற்றிட வில்லை’’ என்ற வரி கவனத்திற்குரியது.
மூன்று காதல்
என்ற தலைப்பிட்டு சுதேச மித்திரன் (13-10-1916) இதழில் பாரதி எழுதிய பாடல்
தனித்துவம் வாய்ந்தது. சரஸ்வதி என்ற தலைப்பில் ,
“பிள்ளைப் பிராயத்திலே-அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே-மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணமேல்-அவள்
ணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும்-கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத்தேன், அம்மா!”
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே-மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணமேல்-அவள்
ணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும்-கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத்தேன், அம்மா!”
என்று பாரதி
எழுதியுள்ள பாடல்வழி,பாரதியின் இயற்கை நாட்டத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.வரையறை
கடந்த கவிக்கருவறை பாரதியின் உள்ளம்.அதனால்தான் தாமரை இலை மீது விழுந்த தண்ணீர்த்
துளியாய் எதன்மீதும் ஒட்டுதலில்லாமல் வாழ முடிந்தது.
பாரதி விரும்பா
ஆங்கிலக்கல்வி
.......................................................................
தமிழின் மீதும்
தமிழ்இலக்கியங்கள் மீதும் தீராப்பற்று கொண்ட பாரதியால் ஆங்கிலக்கல்வியை ஏற்க
முடியவில்லை.எட்டயபுரத்தில் இருந்த கல்விபயில நெல்லை வந்ததால் செலவு அதிகம்
ஆனது.தந்தையின் வறுமை அவரை அரித்தது.மனம் நிம்மதி இழந்து தவித்தது
செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;
தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;
நலம்ஓர் எள்துணையும்கண்டிலேன் அதை
நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!
தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;
நலம்ஓர் எள்துணையும்கண்டிலேன் அதை
நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!
-சுயசரிதை
பொருளில்லாக்
கல்வியாய் பாரதிக்கு அக்கல்வி தெரிந்தது.
உதவி கேட்டு
எழுதிய சீட்டுக்கவி
..........................................................................
.”பெரிதினும்
பெரிது கேள்” என்று புதிய ஆத்திசூடி படைத்த பாரதி பள்ளிப்படிப்பிற்கு உதவிகேட்டு
மன்னருக்குக் கடிதம் எழுதிய நிலையைக் காலம் ஏற்படுத்தியது.
சனவரி 24,1897
ஆம் ஆண்டு தந்தையாரால் பள்ளிப்படிப்புக்குப் பணம் அனுப்பமுடியா நிலையில் பதினைந்து
வயதேயான பள்ளிச் சிறுவன் பாரதி எட்டயபுர மன்னர் வெங்கடேஸ்வரருக்கு மிகத்
துணிச்சலாக விண்ணப்பச் சீட்டுக்கவிதையை நேரடியாக பாரதியே அனுப்பி வைத்தான்.
‘’கைப்பொருளற்றான்
கற்பதெவ்வகை?
பொருளானன்றிக்
கல்வியும் வரவில
கல்வியானன்றிப்
பொருளும் வரவில
முதற்கட் கல்வியே
பயிறல் முறைமையா
மதற்குப்
பொருளிலையாதலினடியேன்
வருந்தியே
நின்பால்வந்தடைந்தனன்’’
கல்வி
பயில்வதற்குப் பெரும்பொருள் இருத்தல் அவசியம் என்பதை வலியுறுத்தி’’ஊழியன் இளசை
சுப்பிரமணியன்’’ என்ற பெயரில் பாரதி வரைந்த சீட்டுக்கவி அன்றைய நிலையின்
படப்பிடிப்பு..
அப்போது
பாரதியார் ஐந்தாம்படிவம்
அதாவது பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார்.
திருநெல்வேலியில்
பாரதியார் பள்ளிப்படிப்பை மேற்கொண்டபோது ஆசிரியர்களிடம் தமிழிலக்கியங்கள் குறித்த
விவாதங்களை மேற்கொண்டார்.புதுமையான சிந்தனைகளை முன்வைத்தார்.
குழந்தைத்
திருமணம்
.................................................
1897 ஜூன் 27
பதினைந்துவயது ...பாரதிக்கும் கடையத்தில் வசித்த செல்லப்பாஐயரின் மூன்றாம்பெண்குழந்தை செல்லம்மாவுக்கும் திருமணம்
நடந்தது.திருமணம் முடித்தவுடன் பாரதி பள்ளிக்குச் செல்லத்தொடங்கிவிட்டார்.
தந்தையின் மரணம்
............................................
1898 ஜூலை 20 ஆம் நாள் பாரதியின் வாழ்வில்
புயல்அடித்த நாள்.பாரதியின் தந்தை சின்னசாமிஐயர் மரணமடைகிறார்.
பள்ளிப்படிப்புத் தடைப்பட்டுவிடக் கூடாது
என்பதைக் கருத்தில்கொண்டு பாரதியின் பாட்டி பாகீரதிஅம்மையார் குடும்பச் சொத்தாக
இருந்த எட்டயபுரம் வீட்டை 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் நாள் இருநூறு
ரூபாய்க்கு அடமானம் வைத்த அரிய செய்தியை வரலாற்றாசிரியர் செ.திவான் ‘’பாரதி
செல்லம்மாள் உயில்’’ என்ற நூலில் பதிவு செய்கிறார்.
பாட்டியின் மனஉறுதி
................................................
பாரதியின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டுவிடக்கூடாது
என்பதற்காக வயதான காலத்திலும் வீட்டை அடமானம் வைத்தாவது படிக்க வைக்கவேண்டும்
என்று போராடிய பாரதியின் பாட்டி பாகீரதிஅம்மையாரின் மனஉறுதியை என்ன சொல்வது?
காசி வாழ்க்கை
....................................
திருநெல்வேலியில் பள்ளிப்படிப்பை நிறைவுசெய்த
பாரதியை 1898 ஆம் ஆண்டு காசிக்கு அழைத்ததும் ,தங்குவதற்குத் தன் வீட்டில்
இடம்தந்து காசி ஜெய்நாராயண கலாசாலையில் பாரதி பள்ளிப்படிப்பைத் தொடர்வதற்கும் காரணம்
பாரதியின் அத்தை குப்பம்மாள்தான்.
திருநெல்வேலி இந்துக் கலாசாலையில்
பள்ளிப்படிப்பு முடித்ததைப்போல் காசியிலும் மத்திய இந்துக்கல்லூரியில் பாரதி
முதல்வகுப்பில் தேறினார்.
தோல்வியிற் கலங்கேல்
.....................................................
மகாகவி பாரதி சிறுவயதில் நிறைய சவால்களை
எதிர்கொண்டார்.
சிறுவயதில் தாயை இழந்து திருநெல்வேலியில்
பள்ளிப்படிப்புக்குக் கூடத் தந்தையால் பணஉதவி செய்யமுடியா நிலையில் எட்டயபுரம் வெங்கடேஸ்வரருக்கு மிகத் துணிச்சலாக விண்ணப்பச்
சீட்டுக்கவிதையை நேரடியாக சிறுவயதில் அனுப்பி வைத்த மனஉறுதி வியக்க வைக்கிறது.
பள்ளிப்படிப்பு
நடக்கும்போதே ஏழுவயது செல்லம்மாவை மணம் செய்ய வைத்த குடும்பச்சூழலையும்
திருநெல்வேலியில் இருந்தபோதுதான் எதிர்கொண்டான்.ஆனாலும் அவன் மனம் தளரா மாமனிதனாய்
திகழ்ந்தான்.”நொந்தது சாகும்” என்று உணர்ந்த உத்தமன் பாரதி.
தோல்வியில் கலங்கேல்
........................................................
தோல்வியின் தோளில் ஏறி நின்றுகொண்டு
வெற்றியின் வரலாற்றினை எழுதியவன் மாகவிஞன் பாரதி.
‘’மனதில்உறுதி வேண்டும்’’ என்ற வரிகள்
அவன் பட்டஅடிகளில் இருந்து பிறந்ததைக் காணமுடிகிறது. ரசிக்கும்மனம் இருந்ததால்
துன்பத்திலும் பாரதியால் உருக்குலையாமல் இருக்க முடிந்தது.
ஆங்கிலேயரின் கொடுமையால் வணிகம் இழந்து
நட்டப்பட்டு நின்ற சின்னசாமி ஐயர் துயரக்கடலில் வீழ்ந்தார். இதனால் உள்ளம் குன்றித் தளர்ந்த அவர் 1898ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்தார். ஐந்து வயதில் தாய்
இறந்துபோனாள்,
. பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து
தனிமரமாய் நின்றார் பாரதியார். அவர் தம் அவல நிலை குறித்துச் சுயசரிதையில்:
தந்தைபோயினன், பாழ்மிடி சூழ்ந்தது;
தரணி மீதினில் அஞ்சல் என்பார்இலர்; சிந்தையில்தெளிவு இல்லை; உடலினில் திறனும்இல்லை; உரன்உளத்து இல்லையால் எந்தமார்க்கமும் தோற்றிலது என் செய்கேன்? ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே? |
(சுயசரிதை: 46)
பள்ளியில்
படித்துக்கொண்டிருந்தபோதே தந்தையின் இறப்பு அவரை நிலைகுலைய வைத்தது.எட்டயபுரம்
வீட்டை அடகுவைத்தாவது பள்ளிப்படிப்பை நிறைவு செய்ய வேண்டும் என்ற பாட்டி பாகீரதிஅம்மையாரின் நெஞ்சுரம் நமக்கு நம்பிக்கை எனும்
செய்தியைத் தருகிறது.
‘’கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே’’ என்ற அவ்வையாரின் வரிகள் நம் நினைவுக்கு
வருகின்றன.என்ன நடந்தாலும் பாரதியார் திருநெல்வேலி மண்ணில் தன் கல்வியை
நிறுத்தவில்லை.
காசி எனும் வேறுபகுதிக்குச் சென்றபோதும் அவன்
வாய்ப்புகளைத் தனதாக்கிக்கொண்டான்.அதனால்தான் திருநெல்வேலி மதிதா பள்ளியில் பாரதி
பயின்ற வகுப்பறையில் வரலாறு இன்னும் வசித்துக்கொண்டிருக்கிறது.
“தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
சிறு
துன்பங்களுக்கும் விதியை நொந்துகொள்கிற நமக்கு மகாகவி பாரதி பாரதியின் வாழ்க்கை
கற்றுத்தரும் பாடம் “குன்றென நிமிர்ந்துநில்”
என்பதுதான்.
*கட்டுரையாளர்
பாரதப்பிரதமரிடம் தேசியவிருது பெற்றவர்,தமிழ்த்துறைத்தலைவராக திருநெல்வேலி
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பணிபுரிகிறார்.
No comments:
Post a Comment